பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஆரம்ப கட்டத்தில் வசன கவிதை என்றும், யாப்பில்லாக் கவிதை என்றும், கட்டிலடங்காக் கவிதை, இலகுகவிதை, சுயேச்சா கவிதை என்றும் பலரால் பலப்பல விதமாகச் சுட்டப்பட்டு வந்த இரண்டாவது பிரிவு, பின்னர் புதுக்கவிதை என்று குதிப்பிடப்படலாயிற்று.
"புதுக்கவிதை” என்ற பெயர் காரணமாகவே பலர் அதை எதிர்ப்பதும் இயல்பாயிற்று.
தமிழ் இலக்கியத்தில், கவிதைத் துறையிலும் தான், ஒவ்வொரு காலகட்டத்திலும், அவசியத் தினாலும் தேவை கருதியும் மரபு மீறல்கள்புதுமைகள் புகுந்து இந்துள்ளன. அந்த அந்தக் காலத்தில் அந்தப் போக்கு புதுக்கவிதையாகவே விளங்கியிருக்கிறது.
சங்ககாலக் கவிதைகளின் தன்மையில் சிலப் பதிகாரம் அமைந்ததில்லை, கம்பர் காலத்தில் விருத்தப்பா செல்வாக்கு பெற்றது. புகழேந்திப் புலவர் காலத்தில் வெண்பா ஏற்றம் பெற்றது. பின்னர் சாதாரண மக்களுக்கும் புரியக்கூடிய விதத்தில் கவிதை வெவ்வேறு புதுவடிவங்களை ஏற்றிருக்கிறது.
அப்புறம், சமீபகாலத்தில், மகாகவி பாரதியார் துணிந்து பல புதுமைகளைக் கையாண்டு வெற்றி பெற்றார். சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது, கொண்ட "நவகவிதை” என்றே பாரதியார் தமது கவிதைகளைக் குறிப்பிட்டுள்ளார்.