பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நிலைமைகளை, அரசியல் விவகாரங்களை, அரசியல் தத்துவ அடிப்படையிலான எழுச்சிகள், போராட்டங்கள் எதிர்ப்பு உணர்வுகளை எல்லாம் கவனத்தில் கொள்வது கிடையாது.

அவற்றை வலியுறுத்துகிற இரண்டாவது பிரிவான சமுதாய நோக்கு இலக்கியம், தனி தபர் நோக்கை தனது எதிரியாகவே கருதுகிறது. அந்தப் போக்கை ஆதரிப்பவர்களைப் பிற்போக்கு வாதிகள் என்று பழிக்கிறது. தனிமனித நோக்கில் உருவாக்கப்படுகிற இலக்கியம் நம்பிக்கை வறட்சியை,விரக்தியை, கசப்பு உணர்வை விதைக் கிறது; மக்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பையும், வாழ்வதில் நம்பிக்கையையும், எதிர்கால நல்வாழ் வில் ஒரு உறுதியையும் அது பரப்புவதில்லை என்றுகுறைகூறிக் கண்டிக்கிறது.

தமிழ்க் கவிதை உலகிலும் இதெல்லாம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

1960 கள் முடிய தமிழ் புதுக்கவிதையில் தனி நபர் நோக்கில் எழுதுகிறவர்களே மிகுந்திருந்தனர். பின்னர், அரசியல் தத்துவமான மார்க்சீயத்தின் அடிப்படையில்- சமுதாயப் பார்வையோடு-கவிதை எழுதுகிறவர்களே அதிகமாகத் தோன்றலாயினர்.

1970 களில் தீவிர வேகம் பெற்ற இந்தக் கவிதைப் போக்கு 1980 களில் மிகப் பரந்த அளவில் பெருகியுள்ளது. இன்னும் பரவி வருகிறது. சமூக நோக்கில் எழுதப்படுகிற புதுக்கவிதைகளின்