பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கிருர்கள். படகர்கள், குறும்பர்களைப்போன்றே தோதவர் களும் மாயக்காரர்கள் என மற்றவர்கள் எண்ணுகின்றனர். தோதவப் பெண்கள் கொஞ்சம் திமிர்ந்த உள்ளம் உடையவர்கள். ஏனைய பெண்டிரைப்போல் இல்லாமல் இவர்கள் யாரோடும் வெட்கமின்றிப் பேசுவார்கள்: பழகு வார்கள்: தொடக்கூடச் செய்வார்கள். ஆனால், சிறிதும் களங்கம் இல்லாமலே பழகுவார்கள். தோதவர்களிலே முதிய பெண்டிர்கள்-கிழவிகள் மிகுந்த மதிப்போடு நடத் தப்படுகிருர்கள். அவர்களுக்கு ஏனேயோர் வணக்கஞ் செலுத்துவதே ஒரு தனிப்பட்டமுறை. ஆணும் பெண்ணும் சந்திக்கிருர்களென்ருல் முதலிலே பெண் தான் வணக்கம் செய்வாள். எப்படி ? நம்மைப் போலவா ? அன்று, அன்று. ஆடவனின் ஒவ்வொரு காலேயும் எடுத்து நெற்றியில் வைத்து வணங்குவாள. - _* சமயம் o தோதவர்கள் நாடோடிக் கூட்டத்தான் என்ருலும், அவர் தம் மணச்சடங்குகள், பினச்சடங்குகள், இறை வணக்கம் முதலிய யாவும் மிகவும் குறிப்பிடத்தக்கன. அவர்கட்கும் நல்ல நாள் உண்டு: திய நாள் உண்டு. தோதவர் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளுதல் அவ்வளவு எளிதன்று. என்ருவது ஒரு நாளேக்குக் கா8லக்கதிரவனே வணங்குவர். கிரகணத்தன்று நோன்பு இருப்பர். சிலவேளை களில் 'பாற்சிக் கோயிற் கதவடியில் விழுந்து வணங்குவர். மணச் சடங்குகளாயினும் சரி, பிணச்சடங்குகளாயினும் சரி. அவர்கள் பெயரால் பூசாரியே கலந்து சடங்குமுறை களேச் செய்தல் வழக்கமாகும். அவர்கள் மணம் செய்வதி லும், பிணத்தை எரிப்பதிலும் ஒரு புதுமை உள்ளது. அது நமக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.

தோதவர்கள், உருவ வணக்கம் செய்வதில்லை. ஆன லும் மூடநம்பிக்கை இல்லாதவர்கள் என்பதற்கில்லே. வாரத் திலே சில நாட்களே நல்ல நாட்கள் என்றும், சில நாட்களைத் திய நாட்கள் என்றும் கருதுகின்றனர். எந்தச் செயலைச்செய்