பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 தாலும் நல்ல நாள் தீய நாள் பார்த்தே செய்வர். ஞாயிறு. வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களும் நல்ல நாட்கள் என்பது பெரும்பாலாருடைய கருத்து. செவ்வாயும் நல்ல நாள் எனச் சிலர் கருதுவர். யாரேனும் தீய நாளிலே இறந்து விட்டால் அன்றைக்கே கொண்டுபோய் எறித்துவிடமாட் டார்கள். இறந்துவிட்டவரின் உடல் அடுத்து வரும் நல்ல நாளில்தான் எரிக்கப்படும். திருமணச் சடங்கு : தோதவர் திருமணமுறை ஒரு தனிச் சிறப்புடையது. உறுதி செய்தல், பரிசம் போடல் முதலிய திருமணச் சடங்கு களே நடத்தும் வழக்கம் அவர்களிடம் இல்லை. அவர்கள் திருமணத்திலே எளிமையே தாண்டவமாடுகிறது. நம்மிடம் உள்ள வீண் ஆடம்பரம் அவர்களிடம் இல்லை. இளைஞன் ஒருவன் தான் விரும்பும் நங்கையின் வீட்டுக்குச் செல்வான். அவள் தந்தையின் அடியைத் தன் நெற்றிவரை துக்கி வணங்குவான். பின்னர் இருவரும் ஒரு ஜோடி எருமைகளேத் தம்முள் மாற்றிக்கொள்வர். கொஞ்ச நாள் வரை தலேவன் தன் வீட்டிலே இருப்பான். பிறகு ஒரு நாள் தனது வருங் கால மாமனர் விட்டுக்குச் செல்வான். பெண்ணின் தங்தை தன் பெண்ணேயும் கொடுத்து ஒரு தனி வீட்டையும் ஒதுக்கித் தருவார். இருவரும் அந்த வீட்டிலே கொஞ்ச நாள் வாழ்வார் கள். மறுபடியும் எருமைகளே மாற்றிக்கொள்வார்கள். இம் மாற்றத்தின்பின் மணப்பெண் தன் மாப்பிள்ளை விடுபுகுவாள். கண்வன் விட்டிலே, தன் கணவனின் அண்ணன் தம்பிமார் களுக்கும் இவள் மனைவியாக இருக்கவேண்டும். தன் கனவ னுக்கு என்ன பணிவிடைகள் செய்வாளோ அதேபோன்று அவர்களுக்கும் செய்தல்வேண்டும். அதுமட்டுமல்ல; வேருெரு. குடும்பத்திலே உள்ள ஆடவைேடு இன்பந்துய்க்கவும் அவ ளுக்கு உரிமை உண்டு. ஒருவன் அவளோடு வாழ்க்கை நடத்தும்போது மற்ருெருவன் முறை வருமால்ை, அவளே அவனுடன் இன்பம் அனுபவிக்க விட்டுவிடவேண்டும். அவ் வாறு விட்டபின் அவளிடம் இன்பம் துய்ப்பவன் கூம்பல்” எனப்படுவான். *