உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I S. இறுதிச் சடங்கு: = சிக்கனம் என்பது நம்மிடம் மட்டுமல்ல; தோதவர்களிட மும் உண்டு. நாமாவது வாழ்க்கையில்தான் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிருேம். அவர்களோ உடலை எரிப்பதிலேகூடச் சிக்கனத்தைக் கையாளுகின்றனர். ஒருவன் இறந்துவிட்டால் உடனே அவன் உடலை எரித்துவிடமாட்டார்கள். நா8லந்து பேர் இறந்த பிறகுதான் பிணங்களைச் சேர்த்து எரிப்பார்கள். இதல்ை கட்டைச் செலவு குறைகிறது என்பது அவர்கள் 蟲 -- எண்ணம். தோதவர்கள் அத்தனைபேரும் ஆளுக்கொரு எருமை யோடு சுடுகாட்டிலே கூடுவார்கள். இறந்தவர்களுக்காக ஒப் பாரி வைப்பார்கள். பிணத்தோடு வில்லும் வைக்கப்பட்டிருக் கும். சுடுகாட்டிலே தோதவர்கள் மரண கீதம் இசைப்பார்கள். படகரும் பிறரும் வந்து இந்தப் பிணச்சடங்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு தோதவர்கள் எருமைக்கூட்டத் திடையே புகுந்து ஆளுக்கு ஒன்றையோ இரண்டையோ பிடிப் பார்கள். அவற்றைப் பிணத்தின் பக்கத்தில் அல்லது கோயி லின் பக்கத்திலே கொண்டு வருவார்கள். பின்னர் கோடரியால் எருமைக் கொம்புகளின் இடையே அடித்து அடித்துக் கொல்லு வார்கள். அதன்பின் பிணங்கள் கொளுத்தப்படும். இறந்த எருமையின் மாமிசம் தோதவர்களுக்குத் தரப்படும். எருமைத் தோல்தளை எடுத்துச்சென்று பதப்படுத்திப் பாய்களாகப் பயன்படுத்துவர். பெயர்கள் : தோதவர்களிடம் இத்தகைய சடங்குகள் நிறைந்திருந்த போதிலும், அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. ஒரு காலத்திலிருந்த குழந்தைப் பலி இன்று இல்லை. ஒருத்தி பல ஆடவர்களுக்கு மனைவியாவதற்குக் காரணம் ஆண்கள் அதிகமாகவும் பெண் கள் குறைவ்ர்கiம் பிறப்பதாக இருக்கலாம். ஆனல் சில் இடங்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். என்ருலும் அங்காடு முழுவதும் இப்பழக்கமே பரவியுள்ளது.