பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பெண்களின் பெயகள் யாவும் பவ் அல்லது புவ் என்றே முடியும். உத்ாரணமாக இயாபவ் சிந்தரிபவ், செமிலிபவ் என் பவற்றைக் கொள்ளலாம். ஆண்கள் பெயர்கள் கட் அல்லது கோட் என்று முடியும். எடுத்துக்காட்டாக கொடுவகோட், அகிரிக்கோட், பெட்மய்கோட் என்பவற்றைக் கூறலாம். மதாதவர் இல்லங்கள் நீலமலையிலுள்ள பல ஊர்களிலே தோதவர்கள் வாழ் ன்றனர். ஒவ்வோர் ஊரும் மன்று' (Mand) என அழைக் கப்படும். ஐந்து அல்லது ஆறு குடிசைகள் அடங்கியது ஒரு 'மன்று ஆகும். ஒரு மன்றிலே உள்ள ஐந்து குடிசைகளி லும் தோதவர்கள் வாழமாட்டார்கள். அவற்றிலே மூன்று குடிசைகளில்தான் அவர்கள் வாழ்வார்கள். ஏனேய இரண்டு குடிசைகளிலே ஒன்று அரங்குவீடாகவும், மற்ருென்று தொழு வாகவும் பயன்படும். அரங்கு வீட்டைத் தோதவர்கள் 'பாற்சி' (Paltchi) என அழைப்பார்கள். இந்த அரங்கு வீட்டிலே பால், தயிர், மோர் முதலிய பொருள்களைச் சேமித்து வைத் துக்கொள்வார்கள். இந்த அரங்கு வீடே கோயிலாகவும் கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் உள்ளே குருவைத் தவிர வேறு எவரும் நுழையக் கூடாது. i தோதவர்களின் குடிசைகளே ஒரு தனி அடிப்படை உடையன. ஒவ்வொரு குடிசையும் முட்டை வடிவாகக் காட்சி யளிக்கும். தோதவர் குடிசையின் அகலம் ஒன்பதடி நீளம் பதினெட்டு அடி உயரம் பத்தடி. இத்தகைய அளவுடைய குடிசைக்கு நிலையான-அழகான கதவே கிடையாது. வாயி லின் உயரம் 32 அங்குலம்: அகலம் 18 அங்குலம். நான்கி லிருந்து ஆறு அங்குலக் கனமுள்ள ஒரு பலகைதான் கத வாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கதவு, வீட்டின் உட் புறமாக அமைந்திருக்கும். கதவுக்கு ஆதாரம், அதற்கடியில் அடிக்கப்பட்ட இரண்டு முளைகளே யாகும். அந்த முளே களின் உயரம் மூன்றடி. என்ருலும் இந்தக் கதவின் மூலம் குடிசையை அடைத்து விட்டால் காற்றுக்கூட உட்புக முடி யாது. இந்த வாசலைத் தவிர வேறு வாசலோ வழியோ