20 கிடையாது. நாம் விட்டின் உள்ளே செல்ல வேண்டுமானல் கைகளைக் கீழே ஊன்றித் தான் செல்ல வேண்டும். இவர்கள் குடிசைகள் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும். வீட் டின் முன்னும் பின்னும் மரச்சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும். எனைய இரு பக்கங்களும் கிரைசல் பிடிக்கப்பட்டிருக்கும். வீட்டின் கூரை, வரிச்சு, பிரம்பு, கூரை வேயும் புல் (கீற்று), ஆகியன கொண்டு வேயப்பட்டிருக்கும். இதல்ை ஒரு மழைத் துளிகூட வீட்டிற்குள் விழாது. வீட்டின் முன்புறம் உள்ள சுவரில் வாயில் அமைக்கப்பட்டிருக்கும். வீட்டின் நடுவிலே தரையிலிருந்து 15 அடி உயரத்தில் கூரை இருக்கும். எனவே எத்துனே உயரமானவர்களும் தாராளமாக நிமிர்ந்து விட்டி னுள்ளே உலாவலாம். வீட்டின் உள்ளே ஒரு புறத்தில் இரண் டடி உயரத்திலே களிமண்ணுல் ஒரு திண்ணே போடப்பட்டி ருக்கும். அந்தத் திண்ணே மீது எருமைத் தோல் அல்லது பாயை விரித்துத் தோதவர்கள் உறங்குவர். இந்தத் திண் ணேக்கு எதிரே அடுப்பங்கரை இருக்கும். இதற்கு அருகிலே சற்று உயர்ந்த மேடை இருக்கும். அதன் மீது சமையலுக்கு வேண்டிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இவற்றிற்கு அருகிலே சுள்ளி விறகுகள் கட்டுக் கட்டாக மிக உயரமாக அடுக்கப்பட்டிருக்கும். பக்கத்திலே 7 முதல் 9 அங்குலம் வரை ஆழமுள்ள குழியைத் தோண்டி அதிலே அரிசியைச் சேமித்து வைத்துக் கொள்ளுவார்கள். இவை தவிர. நாலேந்து ஈயத் தட்டுக்கள், பல கழிகள், கண்டகோடரி ஆகியவையும் காணப்படும். கற்களே அடுக்கி அமைக்கப் பட்ட மூன்றடிச் சுவர் ஒன்று வீட்டைச் சுற்றி இருக்கும். சுவருக்கும் வீட்டுக்கும் இடையே 130 சதுர அடி இடை வெளி காணப்படும். இத்தகைய குடிசைகள் சேர்ந்த மன்றுகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இம் மன்று களேச் சுற்றிலும் அடர்ந்த காடுகள் இருக்கும். அல்லது சில அழகான மரங்களாவது காணப்படும். இந்த மன்றுகளே ச் சுற்றிலும் ஓடை வரையிலும் மாடுகளுக்கு வேண்டிய பச்சைப் புல்வெளி காணப்படும். இந்த ஓடைகளே மன்றுகளுக்கு நீர் தருகின்றன. -
பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/21
தோற்றம்