பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 தோதவர் கோயில்கள் : i நாகரிகத்திலே பின்தங்கி யிருந்த போதிலும் தோத வர்கள் கடவுள் பக்தியிலே பின் தங்கவில்லே. மேலே விளக்கிய மன்றுகள் முற்காலத்திலே நூற்றுக்கணக்கில் இருந்தன. இன்று அவற்றுள் பல அழிந்து போப் விட்டன. எஞ்சியிருப்பவை முப்பது மன்றுகளாவது இருக்குமா என்பது ஐயமே. ஒவ்வொரு மன்றுக்கும் கோயில்கள் உண்டு. தோதவர் எடுத்த கோயில்கள் இரு வகைப்படும். பாற்சி என்பது ஒரு வகைக் கோயில். போவா (Boa) என்பது மற்ருெரு வகை. தற்பொழுது நான்கு போவாக் கோயில்களே காணப்படுகின்றன. இந்தக் கோயிலுக்குள் பூசாரி ஒருவரே போகலாம் எனி இணும், அவரும் நினைத்தபோது திடீரெனப் போக முடியாது. இந்தப் பூசாரி வார்.ழால்’ என்ற பெயரால் அழைக்கப்படுகி ருர். கோயிலுக்குள்ளே நுழையுமுன் அவர் சில பூசை களேப் பல நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். நீலமலையில் 'துர்’ என்ருெரு வகை மரம் உண்டு. அந்த மரத்திலிருந்து ஒருவகை நீர் வரும். அந்த நீரினல் பூசாரி தன்னைத் துரப்மையாக்கிக் கொள்ளவேண்டும். தோதவர்கள் இந்தத் துரர் மரத்தைப் பயபக்தியோடு தொழுகின்றனர். இதன் சாற்றைக் குடிக்கின்றனர். இதன் பட்டையைத் தம் உடலில் தேய்த்துத் துாய்மை செய்து கொள்ளுகின்றனர். இந்தப் பூசாரிகள் தற்காலிமாகவே கோயிற் பணி செய்கின் றனர். பூசை செய்கின்ற வரையில் இப் பூசாரிகள் பெண் களோடு சேரக் கூட்ாது. இந்தப் போவாக் கோயில்கள் ஐந்து வகைப்படும். மம்போவா" என்பது ஒருவகைக் கோயில். உதகையிலிருந்து நான்கு மைல் தொலேவில் சிகுர்ச் (Sigur) சாலையில் உள்ள முட்ட நாட்டில் இக்கோயில் உள்ளது. 'கினெழ் என்பது மற்ருெரு வகைக் கோயில். இதுசோலுார்க்கு அருகிலுள்ள திரையரி மன்றில் உள்ளது. "முட்டாழ்வு' என்பது வேருெரு வகைக் கோயில். இது, பிரிகபட்டி அருகில் காணப்படுகிறது. 'தார்சவம்' என்பது மற்ருெரு வகைக் கோயில். இது குண்டாவிலே உள்ள திரை