பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 யரி மன்றிலே காணப்படுகிறது. முடி மன்றிலுள்ள முக்கூர் தியில் வேருெரு வகையான போவாக் கோயில் உள்ளது. இக் கோயில் சிதைந்த நிலையில் இருந்து, தற்போது முக் கூர்தி அனேக்கட்டிலே அமிழ்ந்து விட்டது. போவாக் கோயிலின் உயரம் 16 அடி. ஆனல் சுற்றுச் சுவர் 30-35 அடி உயரமுள்ளது. உள் குறுக்களவு 9 அடி. இதன் வாயில் மேற்குப் புறமாக உள்ளது. கோயிலின் உட் புறம் இரு பகுதிகளாக்கப்பட்டுள்ளது. பாற்சி என்பது மற்ருெரு வகைக் கோயில். வெளித் தோற்றத்தில் இது ஒரு பெரிய வீடாகவே காட்சி யளிக்கும். இந்தப் பாற்சிக் கோயில்களிலே இரண்டு வகை உண்டு. அரங்கு வீடாக ஒரு வகைக் கோயில் பயன்படும். இதனைத் தோதவர்கள் பயபக்தியோடு காக்கின்றனர். ஏதடு மன்று என்பதற்குப் பெரிய மன்று என்று பொருள். படகர்கள் இதனை முயிமன்று என்பர். H இந்தப் பாற்சி, போவா ஆகிய இருவகைக் கோயில் களுமே அரங்கு வீடாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனல் பூசாரிகள் பாற்சியில் இருக்க முடியுமே தவிர, போவாவில் இருக்க முடியாது. ஏனெனில், பாற்சியைவிடப் போவா சிறந்ததாகக் கருதப்படுகிறது. பாற்சிக்குப் பூசை முதலி யன செய்வோன் பாலல் (Palal) எனப்படுவான். இவனு டைய பெற்ருேருள் ஒருவர் துறவியாகவும் மற்ருெருவர் இடையராகவும் இருப்பர். பாலல் தங்குமிடம் திரையரி மன்று எனப்படும். இங்கு இவனுக்கெனச் சில மாடுகள் உள்ளன. இந்தத் திரையரி மன்றின் அருகில் எந்தப் பெண் னும் போக முடியாது. பாலல் என்பவன் தோதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இவன் பூசாரி ஆகுமுன் கடுமை யான விரதங்களும் சடங்குகளும் செய்ய வேண்டும். ஒரு தடவை இவன் பூசாரியாகி விட்டால் அதன் பின் அவன் கடவுள் போலக் கருதப்படுவான். தோதவர்கள் எல்லோருமே அவனது அறிவுரைக்குக் காத்துக் கிடப்பர். இதனைக் கண்டு தோதவர் மாத்திரமல்ல, படகரும் கோதரும் கூட அஞ்சுவர். இவன் ஒவ்வொரு மன்றிற்குச் செல்லும் பொழுதும் ஆலய