பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மணியைக் கொண்டு செல்வான். விரத காலங்களில், படக ரால் தனியாகத் தயாரிக்கப்பட்ட கறுப்புத் துணி ஒன்றை இவன் உடுத்துக் கொள்வான். இவன், பொதுவாக நா8லந்து ஆண்டுகள் பூசாரியாக விளங்குவான். தோதவ மொழி : தோதவர் பேசும் மொழியைப் பற்றிப் போப் பெருமக ர்ை குறித்து வைத்துப் போன சில குறிப்புக்களே நாம் காணலாம்: . "தோதவர் மொழி பெரும்பாலும் பழைய கன்னடத் தின் கிளை மொழியாகும். தோதவர் மொழியிலே ஏனைய திரா விட மொழிகளிலிருப்பதைக் காட்டிலும் அதிகமான ஒலிகள் உண்டு; ர்ட்ச், வ்வ் என்னும் ஒலிகள் தோதவர் மொழிக்கே உரியன. வ்வ் என்ற ஒலி ஏ&னய திராவிட மொழிகளிலே ப் என்று மாற்றி ஒலிக்கப்படுகிறது. ஆனால், தோதவ மொழி யிலே இவ்வொலி தெளிவாகவும், ஒழுங்காகவும் ஒலிக்கப்படு கிறது. இத் தோதவ மொழி ஒரு காலத்தில் முழுக்க முழுக்க உட்பிணைப்பு நிலை மொழியாக விளங்கியது. இன்ருே வெறும் பேச்சு மொழியாக மட்டும் நிலவுகிறது. இது ஒரு வகைப் பழங் கன்னடம் போலத் தோன்றும். தோதவர்கள் ஏறத்தாழ 800 ஆண்டுகட்கு முன் மைசூர் வெளியிலிருந்து வந்து நீலமலையிற் குடியேறியவர்களாக இருத்தல் வேண்டும்." பேரறிஞர் போப்பின் இக் கூற்று முற்றிலும் உண் மையே. தோதவர்கள் பிற மக்களோடு பேசும்போது அவர்கள் பேச்சிலே முக்காற் பகுதிக்கு மேல் கன்னட மொழித் திரிபுச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம், கன்னட மொழி பேசுகின்ற படகரோடு தோதவர்கள் கொண்ட நெடுநாளையத் தொடர்பே என்று கூறலாம். ஆனால், தோதவமொழி தோதவரின் சொந்த மொழி யாக இருந்த போதிலும், அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொள்ளும்பொழுது மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத படி இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பது அவ்வள