26 இயம்புகின்றன. மேலும் படகரைப் பற்றிய பல விதமான முரண்பட்ட கதைகள் வழங்குகின்றன. இக்கதைகள் பல வற்றையும் நீலமலை அறிக்கையில் தெளிவாகக் காணலாம். புலிகொன்ற வீரன் : பணகுடி சோலா என்பது தோதுரு கல்வட்டங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது. இப் பணகுடி சோலாவிலே கரைராயன் என்பவனுக்குரிய பழமையான சிறு கோயில் ஒன்று காணப்படுகிறது. இக் கோயிலைச் சுற்றிச் சிதைந்த கற் சுவர் ஒன்று காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலின் உள்ளி ருக்கும் ஒரு சிறு தூய கல் வட்டத்துக்குள்ளே அரிக்கப்பட்ட கற்கள், புலி, குதிரை மீதிருக்கும் மனிதன், சில நாய்கள் ஆகிய பல களிமண் பொம்மைகள் உள்ளன. கூனூர் மலேத் தொடரில் உள்ள 'உலிகள் துரூக் என்னும் சிகரத்துக் கருகி லிருக்கும் ஊருக்கு, உலிகள் என்று பெயராம். உலிகள்' என்ருல், புலிக்கல் என்பது பொருள். முன் கூறிய பொம்மை கள், இடையில் கூறிய சிகரம், பின் குறித்த 'புலிக்கல்' ஆகியன தெரிவிக்கும் செய்தி மிகச் சுவையானவை. புலிக்கல் பகுதியிலே, நெடுநாளாக ஒரு புலி அந்த ஊர் மக்களுக்கு ஓயாத தொல்லே கொடுத்து வந்ததாம். இது பல மனிதர்களைக் கொன்று விட்டதாம். இதல்ை அவ்வூரி னர் பெரிதும் கலக்கமடைந்தனர். ஒரு படகன்-கட்டிளங் காளை-அவ்வூரினரின் கலக்கம் போக்கக் கருத்துக்கொண் டான். அப்புலியை நாய், குதிரை முதலியவற்றின் துனே யோடு கொன்றுவிட்டுத் தானும் மாண்டு போனம்ை. அவன் நிஜனவாக எழுப்பப்பட்டவையே தொடக்கத்தில் குறித்த கோயிலும், பொம்மைகளும். இவ்வாறு கொல்லப்பட்ட புலி யின் நினைவாக உலிகள் கிராமத்துக் கருகில் உள்ள பிள்ளே யார் கோயில் பக்கத்தில். மூன்று கற்கள் நடப்பட்டுள்ளன. இவை அப் புலியின் சிலையாக இருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்து. - இங்ங்னம் புலியைக் கொன்று மாண்ட மாவீரனுக்குப் பட்கர் இன்றும் விழாக் கொண்டாடுகின்றனர். விழாவின் Y
பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/25
தோற்றம்