பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 | போது பணகுடிச் சோலாக் கோயிலில் உள்ள பழைய பொம்மைகள் கழிக்கப்பட்டுப் புதிய பொம்மைகள் வைக்கப் படும், இக் கோயிலில் விழாக் கொண்டாடுகையில் இப் பொம்மைகளே வைத்துப் படகர் சூள் உரைத்தல் வழக்கம். உதயராயன் கோட்டை : - கோணக்கரை என்பது படகர் வாழும் மற்ருேர் இடம். இங்கிருந்து இரண்டு கல் தொலைவில் கோட்டை காட்ா, அதா வது கோட்டை வெளி என்ருேர் இடம் உள்ளது. இங்கு உதயராயன் கோட்டை யொன்று கலகலத்துப் போய்த் காணப்படுகிறது. இது பற்றிய பல செவிவழிக் கதைகள் படகரிடை வழங்குகின்றன. இக்கதைகள் மூலம் உதய ராயன் என்பவன் யார் ? அவன் வரலாறு என்ன என்ப வற்றை ஒரளவு தெரிந்து கொள்ளலாம். - உதயராயன் என்பவன் உமட்டுர் மன்னனிடம் தண்டல் நாயகமாகப் பணியாற்றி வந்தான். இந்த உதயராயனுக்கு, சிறு முனக்கு அருகில் கொல்லந்துறை என்ற இடத்திலே ஒரு கோட்டை சொந்தமாக இருந்தது. அப்போது நெடு குளம் என்ற ஊரிலே நெட்டிலிங்கக் குடியைச் சேர்ந்த குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அக்குடியில் தோன்றிய முத்துக் கவரி என்ற பெயருட்ைய நங்கையை உதயராயன் மணகதான. - o இவனது கொல்லந்துறைக் கோட்டைக்கு அப்பால் அரைக்கல் தொலைவில் மகாலிங்கச்சாமி கோயில் ஒன்று. இருந்தது. அங்கே ஆண்டு தோறும் விழாவும், திக்குதித் தலும் நடைபெறும். உதயராயன் இத் திக் குதித்தலைத் தன் மனேவியின் விருப்பப்படி தன் கோட்டை முன்பாகவே கடத்துமாறு அவ்விழா நடத்துவோரைப் பணித்தான். இத ல்ை கடவுளின் சினத்துக்கு ஆளாகி அவன் சில நாட்களில், இறந்து போனன் என்பார்கள். -- . . . . குதிரைமாலை : .* . . . " மோயார் பள்ளத்தாக்கிலே அணை கட்டி என்ற குடி, யிருப்பு ஒன்று உள்ளது.இங்கே ஒரு நீரோடை பாய்கிறது.