பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பீர்மூக்கு மலையில் தோன்றி விழும் அருவியிலிருந்து வருவதாகும். இந்த அருவிக்குரிய மலையின் பெயர் குதிரைமலைத் தொடர் என்பது. " படகன் ஒருவனுக்கு அவன் மீனவி நல்ல அரிசியையும், உடன் பிறந்தான் கெட்ட அரிசியையும் தந்தனராம். அதுகண்ட அப்படகன் தன்குதிரை மீதேறி இம்மலையுச்சி அடைந்து குதிரையொடு வீழ்ந்து இறந்தானம். இதல்ை அம்மலேயுச்சி குதிரை மலைத் தொடர் எனப்பெயர் பெற்றது" என்று ஒரு கதை வழங்குகிறது. இப்படகரின் தோற்றம் பற்றி ஏராளமான கதைகள் வழங்குகின்றன. மைசூரில் வாழும் கன்னடர் பரம் பரையினரே படகர் என்று ஒருசாரார் கருதுகின்றனர். கன்னட நாட்டில் ஏற்பட்ட பஞ்சம், குழுப்பம், அரசியல் சீர்குலைவு ஆகியவற்றின் காரணமாக மைசூர் மக்கள் கி. பி. 17ம் நூற்ருண்டில் நீலமலை வந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். * இதப்பா-பாலையாரு பரம்பாரை : ஒரு காலத்தில் தலைமலைச் சாரலிலே அண்ணன்தம்பியர் எழுவர் தம் தங்கையருடன் வாழ்ந்து வந்தனர். அப்பொழுது அங்கு ஆட்சி செலுத்திவந்த துருக்க மன்னன் ஒருவன் அவர்தம் தங்கையரைக் கெடுக்க முயன்ருன். இதனை அறிந்த அவர்கள். குடிபெயர்ந்து வீத்தல் நகர் ' என்ற சிற்றுாருக்குச் சென்றனர். அங்குச் சில காலம் வாழ்ந்த பின்னர், நீலமலையின் வெவ்வேறு பகுதிகளிலே குடியேறினர். இவர்களுக்குள்ளே இரண்டாமவனை இதப்பாவுக்குப் பெண் மக்கள் இருவர் இருந்தனர். இரு வரும் பருவ எழிற் பாவையராய்த் திகழ்ந்தனர். ஒரு நாள், இதப்பா வெளியே சென்றிருந்த வேளையிலே, இரு தோதவர் உள் நுழைத்து அவனுடைய மனைவியின் கற்பைக் களங்கப்படுத்தி விட்டு ஓடிவிட்டனர். சேதியறிந்த இதப்பாவின் இதயம் கொதித்தது. பழிக்குப்பழி' என்று அவன் உள்ளம் குமுறியது. ' பாலையாரு ' இருவருடன் இதப்பா கூட்டுச் சேர்ந்தான். மூவரும் சேர்ந்து, தோதவரை