பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஒழிக்கத் திட்டம் தீட்டினர். திட்டம் வெற்றியடைந்தபின் இதப்பாவின் பெண்கள் இருவரும் பாலையாரு இரு வருக்கும் மாலையிட வேண்டும் என்பது அவர்தம் உடன் படிக்கை. தோதவர் அடக்கி ஒடுக்கப்பட்டனர். உடன் படிக்கைப்படி திருமணம் நடைபெற்றது. பாலேயாருபடகர் பரம்பரையே இன்று உலிகள் என்ற சிற்றுாரிலே வாழ்கின்றது இப்பரம்பரையினர் இன்றும் தன் முன்னே ரான் எழுவரையும் இதப்பா-இதா என்று பெயரிட்டு வழிபடுகின்றனர். நீலமலை அறிக்கை, படகர் பற்றிய மற்ருெரு குறிப்பை யும் தருகிறது. படகருள் பெரும்பாலோர் இலிங்காயத்து நெறி யினர். இலிங்காயத்து நெறியின் தோற்றம் கி. பி. 12-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியாகும். ஆகவே, படகர் நீலமலை யில் குடியேறிய காலம் கி. பி. 13-ஆம் நூற்ருண்டாக இருக்கலாம். பாதிரியார்கள் சிலர் மலையாளத்திலிருந்து கி. பி. 1602-இல் நீலமலைக்கு வந்து அம்மலையின் தெற்குப் பகுதிகளில் குடியேறினர். அவர்கள் வந்த காலத்திலே அப்பகுதிப் படகர்கள் இலிங்காயத்து நெறியினராக வாழ்க் தனர் என்று அவர்கள் குறித்துள்ளனர். படகர் மொழி கன்னடச் சார்புடைய மொழியாயினும், இன்றைக்கு அது பெருமளவில் மாறுபட்டே வழங்குகிறது. படகர் மொழி யில் மூலமொழிச் சொற்கள் மிகக்குறைவு. மூலமொழிக்கு உரிமையல்லாத பல சொற்கள் காணப்படுகின்றன. இம் மொழிச் சொற்களைக் கொண்டு கணக்கிடுவோமால்ை படகர் கள் கி. பி. 12-ஆம் நூற்ருண்டிலேயே இடம் பெயர்ந்து நீலமலைக்கு வந்திருக்கலாம் என்று கருதும்படியாக இருக்கிறது. இம் மொழி பற்றி திரு. கிரிவர் கூறும் கருத்துக்கள் சிந்திக்கத்தக்கன. தோதவர்கள் கதைகளுள் ஒன்றிலேனும் படகர் பற்றிய சிறு குறிப்பும் இல்லே. ஆளுல் கோதவர், குறும்பர், இருளர் முதலியோர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இதல்ை தோதவரும் படகரும் பின்னளிலேயே சந்தித்திருக்க வேண்டும் என்று