பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

மீது ஓங்கி அடித்தார்கள். உடனே அது பிளந்தது. அப்போது அப்பிளவிலிருந்து ஓர் ஒளி வீசியது! அதைக் கண்டு, நாயகம் அவர்கள் "அல்லாஹு அக்பர்” என்று சொன்னதும், அங்கிருந்த தோழர்கள் அனைவரும் "அல்லாஹு அக்பர்" என உரக்க முழங்கினார்கள்.

பெருமானார் அவர்கள் "எனக்கு ஷாம் தேசத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன" என்று கூறிவிட்ட, இரண்டாவது முறையும் பாறை அதிகமாகப் பிளவு பட்டது. முன்போலவே அதிலிருந்து ஒளி வீசியது. பெருமானார் அவர்கள், "அல்லாஹு அக்பர்” எனக்குப் பாரசீக நாட்டின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன" என்று கூறினார்கள். மூன்றாவது முறை உடைக்கவும் பாறை பிளவுண்டு, முன்போலவே ஒளி வீசியது. பெருமானார் அவர்கள், எனக்கு ஏமன் நாட்டின் திறவு கோல்கள் கொடுக்கப்பட்டன" என்று சொன்னார்கள்.

பின்னர் பெருமானார் அவர்கள் கண்ட காட்சியை விளக்கிக் கூறினார்கள்:

"முதலாவதாக, ரோமபுரிச் சக்கரவர்த்தியான கெய்ஸருடைய ஷாம் மாகாணத்திலுள்ள அரண்மனையும், இரண்டாவதாக, மதாயின்