பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

பனூகுறைலா கூட்டத்தாரைத் தூண்டியவர் அவரே. அதைத் தவிர அவருடைய கூட்டத்தாருடன் மதீனாவை விட்டு வெளியேறி, கைபருக்குக் போகும்போது, பெருமானார் அவர்களுக்கு விரோதமாக ஒருவருக்கும் உதவி புரிவதில்லை என்பதாக ஆண்டவன் சாட்சியாகக் குறிப்பிட்டு உடன்படிக்கை செய்திருந்தார்.

(உடன்படிக்கையின்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்பதை முன் நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டும்).

அவரைக் கொல்வதற்காகக் கொண்டு வந்து நிறுத்தியபோது தம் குற்றத்தை உணர்ந்து, பெருமானார் அவர்களிடம், "ஆண்டவன் பேரில் சத்தியமாகச் சொல்லுகிறேன். உங்களுடன் ஏன் விரோதம் செய்து கொண்டேன் என்பதைப்பற்றி எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், ஆண்டவனை விட்டு எவன் விலகுகிறானோ, அவனை ஆண்டவனும் கைவிடுகிறான் என்ற உண்மையை இப்பொழுது அறிந்து கொண்டேன்" என்றார்.