பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66


ஹிஜ்ரீ ஐந்தாவது, ஆறாவது வருட மத்தியில், சில சிறிய சண்டைகள் நிகழ்ந்தன.

முன்னர், முஸ்லிம்களில் பத்துப் பேரை வஞ்சித்துக் கூட்டிக்கொண்டு போய் ரஜீஅ என்னும் இடத்தில் அவர்களைக் கொலை செய்த கூட்டத்தாரைத் தண்டிப்பதற்காகப் பெருமானார் அவர்கள் தோழர்களுடன் அங்கே சென்றார்கள்.

அவர்கள் வருவதை அறிந்த அக்கூட்டத்தார் அருகில் இருந்த மலையில் போய் ஒளிந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் பெருமானார் அவர்கள் தங்கியிருந்து, அவர்களுக்காக ஆண்டவனிடம் வேண்டுதல் செய்துவிட்டுத் திரும்பி விட்டார்கள்.


40. கருணை மிகுந்த உள்ளம்

நபி பெருமானார், பகைவர்களிடத்தில் எத்தகைய கருணை காட்டினார்கள் என்பதை பல நிகழ்ச்சிகள் மூலம் அறியலாம்.

முஸ்லிம்களுக்கும் பனூஹனீப் கோத்திரத்தாருக்கும் நிகழ்ந்த சிறிய சண்டையில் அக்கூட்டத்