பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தூதரே! தாங்கள் உண்மையான நபி அல்லவா!" என்று கேட்டார்கள்.

"நிச்சயமாக நான் உண்மையான நபியாயிருக்கின்றேன்" என்றார்கள் பெருமானார்.

"நாம் கடைப்பிடிப்பது நேர்மையான வழி அல்லவா?" என்று கேட்டார்கள்.

"ஆம்!"

"குறைஷிகள் கடைப்பிடிப்பது தவறான வழி அல்லவா?"

"ஆம்!"

"இந்த நிலையில், மத சம்பந்தமான விஷயத்தில், நாம் எதற்காக நம்மைத் தாழ்வுபடுத்திக் கொள்ள வேண்டும்?" என்று உமர் அவர்கள் கேட்டார்கள்.

அதற்குப் பெருமானார் அவர்கள், "நான் அல்லாஹ்வினுடைய தூதன். அவனுடைய கட்டளைக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது" என்று பதில் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் உமர் அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு அபூபக்கர் அவர்களிடம் சென்று நிகழ்ந்தவற்றை விவரித்துக் கூறினார்கள்!