பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


ஒழிக்க மாட்டேனென்று துன்பந் தருகிறது. உணவு கிடைத்த காலத்தில் இரு நாளுக்குரிய உணவை ஏற்றுக் கொள்' என்ருலும் அது ஏற்றுக் கொள்ளச் சித்தமா யில்லை. அவ்வுணவுக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரும் படும் பாட்டை அது நோக்குவதில்லை. மேற்கூறியது ஒரு பத்தி, இதில் பசியின் கொடுமை கூறப்படுகிறது. இப்பத்தியிலுள்ள செய்தியை இதன் முதல் வாக்கியமே காட்டுகிறது. இவ்வாறு பல வாக்கி யங்கள் சேர்ந்து ஒரெ க ரு த் ைத வலியுறுத்துவதே பத்தியாகும். = "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று ஒளவைப் பிராட்டியார் கூறினலும், அவர்களில் முதல் முதல் அறியக்கூடிய தெய்வம் அன்னையே யாவாள். ஒவ்வொருவரும் குடியிருந்த கோயில் அவள்ே யாவாள், குழந்தைகள் செய்யும் குற்றங்கள் அத்துணையும் அவளே பொறுப்பாள். குழந்தைகள் நோய் கொண்ட காலத்திலே அவைகளுக்குப் பதில் அவளே மருந்தருந்தி அவைகளுக் கேற்பட்ட நோயைப் போக்குவாள். ஈ, எறும்பு அணுகா வகையில் குழந்தைகளைத் தொட்டியில் இட்டும், மார்போ டணைத்தும், கரங்களில் தாங்கியும், இசை பாடியும் வளர்த் தவள் அவளே, ஆகவே அவளே முதற் கடவுளாகும். இதுவும் ஒரு பத்தியே. அன்னையே முதற் கடவுள் என்பதைப் பல வாக்கியங்கள் வற்புறுத்துவதோடு இறுதி வாக்கியமும் அதை வலியுறுத்துகின்றது. இவ்வாக்கியங்களில் ஒவ்வொன்றும் யாவர்க்கும் எளிதில் பொருள்பட்டு நிற்கின்றது. இ வ் வா று வருவதே எளிய நடையாம்.