பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


மேற்கூறிய பத்தியில், அதன் பின் அடைப்புக்குள் கொடுக்கப்பட்ட சொற்கள் வழக்கில் இல்லாத திசைச் சொற்கள். இவ்வாறு எழுதுவது கொடுந்தமிழ் நடை. 'வழக்கில் இல்லாத திசைச் சொற்களைப் புகுத்தி எழுதுவதே கொடுந்தமிழ் நடையாம்.” கொச்சை நடை அவங்க வூட்டிலே இருக்காங்க. அவங்க வூடு ரெம் பத் துாரத்தில் இருக்கு. அந்த வூடு கல்லு வூடு. கட்டை போட்டிருக்காங்க. இதில் சொற்கள் உருவங்கெட்டு வந்துள்ளன. 'உருவங் கெட்ட சொற்களால் எழுதுவதே கொச்சை நடையாகும்,” "வாக்கியங்களால் பத்தி அமைகிறது. சில சமயம் ஒரே வாக்கியத்தாலும் ஒரு பத்தி அமைவதுண்டு. அதில் ஒரு கருத்தே வலியுறுத்தப்படும். அக்கருத்து இன்ன தென்பது அதன் முதலிலோ, முடிவிலோ, இடையிலோ வைக்கப்படும். முதலில் அமைவதே சிறப்பைத் தருவ தாகும்.” குறிப்பு: ஒரு கருத்தைப் பல வாக்கியங்களிலும் பல வாக்கியங் களில் அமைந்த கருத்தை ஒரு வாக்கியத்திலும் அமைக்கப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். 5. நடை எளிய நடை ஒரு நாள் நான் நெல்லைக்குச் சென்றேன். செல்லும் வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதில் நீர் பெருகி