பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


4. பல, சில என்பவற்றின் முன் வல்லினம் பல -- பல - பலப்பல சில -- சில - சிலச்சில இவற்றில் பல, சில என்பவற்றின் முன் தாமே வர மிகுந்தன. "பல, சில என்பவற்றின் முன் தாமே வர வலி மிகும். 5. ஆகாரத்தின் முன் வல்லினம்: உண்ணு + குதிரை - உண்ணுக்குதிரை இதில் உண்ணு என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உண்ணுக் கிடந்தன - இதில் உண்ணு' என்பது ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். உண்ணுக் கிடந்தான் — இதில் உண்ணு' என்பது உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். மேற்கூறியவற்றின் முன் வந்த வல்லினம் மிகுந்தது. "ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினை யெச்சங்கட்கும், உடன்பாட்டு இறந்தகால வினையெச்சங் கட்கும் முன் வரும் வல்லினம் மிகும்.” 6. அன்றி, இன்றி என்பவற்றின் முன் வல்லினம் அன்றி + போகி - அன்றிப்போகி உப்பின்றி + புற்கை - உப்பின்றிப் புற்கை