பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 13. இடம் விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் o, உனது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பார். அதன் நான்கு பக்கங்களிலும் தக்கபடி இடம் விட்டிருப் பதைப்பார். அது போலவே ஒவ்வொரு பக்கத்தின் நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நீ எழுதுதல் வேண்டும். அவ்வாறு எழுதும்பொழுது ஒ வ் .ெ வ ா ரு எழுத் திற்கும், ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு பத்திக்கும் இடையில் இடம்விட்டு எழுதல் வேண்டும். ஒவ்வொரு பத்தியிலும் முதல் வரி சிறிது உள்ளடக் கியே தொடங்க வேண்டும். ஒரு சொல்லை ஒரு வரியின் இறுதியிலும் அடுத்த வரியின் முதலிலுமாகப் பிரித்து எழுத நேர்ந்தால் அச் சொல்லை அதன் அசைகளுக்குத் தகுந்தபடி பி ரி த் து எழுத வேண்டும். முதல் வரியின் ஈற்றில்தான் எழுத விரும்பும் சொல்லுக்கு இடமுமில்லாது, அதைப் பிரிக்கவுந் தெரியவில்லை என்ருல் அடுத்த வரியிலே அச் சொல்லை எழுத வேண்டும். துப்பார்க்குத் துப் பாயதுப் பாக்கித்துப் பார்க்குத் துப்பாய து உம் மழை. இதில் இடம் விட்டு எழுதப் பட்டுள்ளது. என்ருலும் பொருள் விளங்கவில்லை. துப்பார்க்குத் துப்பாயதுப் பாக்கித் துப்பார்க்குத் துப்பாய து உம் மழை.