பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்திரம்: 'அண்ணம் நுனிநா கனியுறின் றன வரும்.' சார்பெழுத்து இது ஆய்தவெழுத்து. இதை உச்சரித்துப்பார். இது வாய் திறக்கப் பிறத்தலை அறியலாம். மற்றைய சார்பெழுத்துக்கள் முயற்சி வகையால் தத்தம் முதலெழுத்துக்களை ஒத்துப் பிறத்தலை அறியலா கும். "வாயைத் திறத்தலாகிய முயற்சியால் ஆய்த வெழுத்துப் பிறப்பதாகும். மற்றைய சார்பெழுத்துக்கள் தத்தம் முதல் எழுத்துக்களை ஒத்து முயற்சி வகையால் பிறப்பதாகும்.” குத்திரம்: 'ஆய்தக்கு இடம்தலை அங்கா முயற்சி சார்பு எழுத்து எனவும் தம்முதல் அனைய." குறிப்பு: பல எழுத்துக்களுக்கும் பிறப்பு ஒன்ருகச் சொல்லப் பட்டன வாயினும் உயர்த்தி உச்சரித்தலும், தாழ்த்தி உச்சரித்தலும், நடுத்தரமாக உச்சரித்தலும் ஆகிய எழுத்திற்குரிய ஒலி முயற்சி வகையால் ஒன்றற்கு ஒன்று பிறப்பு வேறுபாடுகளும் அவ்வவற்றுள் சிறிது சிறிது உள்ளன. தந்தது' என்பதிலுள்ள தகரங் களின் ஒலி வேறு பாட்டைக் கவனிக்க வேண்டும்.