பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சொல் சொல்லின் வகை 1. இயற்சொல் மண், பொன், மரம் என்ற .ெ சா ற க ள் பெயர்ச் சொற்கள். இவை தமிழ் நாட்டில் வழங்குபவை. இவை படித்தவர்க்கும், படியாதவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்கும்படி நிற்கின்றன. இவ்வாறு வருவதே பெயர் இயற்சொல். = நடந்தான், வந்தான் - இவைகள் வினைச் சொற்கள். இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற் கும் .ெ சா ற் க ள். இவ்வாறு வருவதே வினை இயற் சொல்லாம். ■ அவனை, அவனுல் - இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற்கும் சொற்கள். இவை வேற்றுமை. உருபை ஏற்றிருக்கின்றன. இ வ் வா று வருவதே இடை இயற் சொல்லாம். அழகு, அன்பு - இவையும் யாவர்க்கும் இயல்பாய் பொருள் விளங்க நிற்கும் சொற்கள். இவைகளே உரி இயற் சொற்களாம். "செந்தமிழ் நாட்டிலே வழங்கும் பெயர், வினை இடை, உரிச் சொற்களாகி, திரி சொற்கள் போல் அல் லாமல், படித்தவர்க்கும் படியாதவர்க்கும் தமது பொருள், களைத் தெரிவிக்கின்ற தன்மையையுடைய சொற்களே இயற் சொல்லாம்.”