பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


குத்திரம்: 'செக்தமிழ் ஆகித்திரியாது யார்க்கும் தம்பொருள் விளக்கும் தன்மைய இயற் சொல்." 2. திரி சொல் கிள்ளை, தத்தை - இச்சொற்கள் கிளி' என்ற ஒரு பொருளைக் குறித்தன. படித்தவர்கள் மாத்திரமே இவற் றின் பொருளை உணர முடியும். படியாதவர்களுக்கு இச் சொற்களின் பொருள் தெரிவதில்லை. இ வ ற் றி ன் பொருள் உலக இயற்கையினின்று திரிந்துள்ளன. இவ்வாறு வருவதே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரி சொல். - படர்ந்தான், ஏகினன் - இச்சொற்கள் வினைச் சொற் கள். இவை போனன்” என்ற பொருளை உணர்த்தின. இவை உலக இயற்கையினின்று திரிந்தன. ப டி த் த வரே யன்றிப் படியாதவர், இவற்றின் பொருளை உணரார். இவ்வாறு வருவதே ஒரு பொருள் குறித்த பல வினைத் திரி சொல். - சேரும், வருதும் - இச்சொற்கள் மேற்கூறியவாறே இருக்கின்றன. இவை ஒரு பொருள் குறித்த பல இடைத் திரி சொல். = * சால, உறு, தவ - இவைகளின் பொருளும் படித்த வர்கட்குத்தான் தெரியும். இவை ஒரு பொருள் குறித்த பல உரித் திரி சொல், - மேற்கூறியவை போன்று ஒரு சொல் பல பொருள் களை விளக்குதலும் உண்டு. *