பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


காசு - இப்பெயர்ச்சொல் பொன், மணி முதலிய பல பொருள்களைக் குறிக்கும். இவ்வாறு வருவதே பல பொருள் குறித்த ஒரு பெயர்த் திரி சொல். வரைந்தான் - இவ்வினைச்சொல் நீக்கினன், கொண் டான், எழுதினன் முதலிய பல பொருள்களைக் குறிக்கும். இவ்வாறு வருவதே பல பொருள் குறித்த ஒரு வினைக் திரி சொல். கொல் - இது இடைச் சொல். ஐயம், வி ைமுதலிய பல பொருள்களில் இது வரும். இது பல பொருள் குறித்த ஒரு இடைத் திரி சொல். கடி - இது உரிச்சொல். இதுவும் காப்பு, கூர்மை, அச்சம் முதலிய பல பொருள்களைக் குறிக்கும். ஆகவே இதுவும் பல பொருள் குறித்த ஒரு உரிச்சொல். "ஒரு பொருளையே தெரிவிக்கின்ற பல சொற்களாயும் பல பொருள்களைக் கு றி க் கி ன் ற ஒரே சொல்லாகியும் படித்தவர்களால் மாத்திரமே அருமையாக அறியப்படுகிற பொருளையுடைய சொற்களே திரி சொற்களாம்". குத்திரம்: "ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும் பலபொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் அரிது உணர் பொருளன திரி சொல் ஆகும்.'