பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


3. வடசொல் தற்பவம் - தற்சமம் - தத்திதாந்தநாமம் - சூத்திரங்கள். வடசொல்: கமலம், குங்குமம் - இவைகள் வட சொற்கள். வட மொழிக்கும் தமிழ் .ெ மா ழி க்கு ம் பொது எழுத்தாலாகி தமிழில் வந்து இவை வழங்குகின்றன. சுகி, போகி - இவைகளும் வட சொற்கள். இவை வடமொழியின் சிறப்பெழுத்துக்களாலாகி தமிழ் மொழிக் கியைய விகாரப்பட்டு தமிழில் வந்து வழங்குகின்றன. 'வடமொழிச் சொற்கள் தமிழ்நடை பெற்றுத் தமிழில் வந்து வழங்குவதே வட சொல்லாம்’. - வடமொழி தமிழில் வருதல் வடமொழியில் உயிரெழுத்துக்கள் பதினறு. அவை அச்சு என்று பெயர் பெறும். மெய்யெழுத்துக்கள் முப்பத் தேழு. அவை "ஹல்லு என்று பெயர் பெறும். உயிரும் மெய்யுமாகிய மேற்கூறிய ஐம்பத்து மூன்று எழுத்துக்களில் இருபத்தைந்து எழுத்துக்கள் வடமொழிக் கும் தமிழுக்கும் பொது எழுத்துக்களாம். அவை உயிர் பத்து - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. மெய்யெழுத்து பதினைந்து - க, ங், ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள.