பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


வேறு ஒரு பொருளை ஒருவன் வெளுக்கும்படி செய் தான் என்று மேற்கூறியது பொருள்படும்பொழுது பிற வினை. - "ஒரு வினைச்சொல் தன் வினைப்பொருளும், பிற வினைப் பொருளும் கொண்டிருப்பதே தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக வரும் வினையாம்.” செய்வினக்கும் செயப்பாட்டு வினைக்கும் பொதுவினை புலி கொன்ற யானை - இது புலியைக் கொன்ற யானை என்று பொருள்பட்டால் செய்வினை. புலியால் கொல்லப்பட்ட யானை என்று பொருள் பட்டால் இது செயப்பாட்டு வினை. உடன்பாட்டுக்கும் எதிர்மறைக்கும் பொதுவினை சாவான் - இது இறப்பான் என்று பொருள்படும் பொழுது உடன்பாட்டு வினை. . இதுவே இறவான் என்று பொருள்படுமானல் எதிர் மறை வினை. முற்று வினைக்கும் எச்ச வினைக்கும் பொதுவினை ஒடும் - இது நாய் ஓடும் என்று பொருள்பட்டால் முற்று வினை. 'இது ஒடுங் காலத்திற் கண்டேன்’ என்று பொருள் பட்டால் எச்சவினை.