பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


றுமை உருபுகள். இவை பெயர்ச் சொற்களையடுத்தே வரும். இவை தனித்து நடத்தல் இல்லை. அன், ஆன், அள், ! ஸ், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், wł گلیسی அல், அன், அம், ஆம், எம். ஏம், ஒம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர், க, ய, உம். இவைகள் விகுதிகள்இவைகளும் தனித்து நடத்தல் இல்லை. இவை வினைச் சொற்களை யடுத்தே வரும். த், ட், ற், இன், கிறு, கின்று, ஆ நின்று, ப், ள் - இவை முக்கால இடைநிலைகள். இவைகளும் தனித்து நடத்தல் இல்லை. இவை வினைச் சொற்களின் இடையிலே வரும். * அன், ஆன். இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ. அ, உ, ஐ. கு, ன - இவைகள் சாரியைகள். இவைகளும் தனித்து நடவா. விகுதி, பதம், உருபு முதலிய புணர்ச்சிகளிலும், தனிமொழிகளி லும் வரும். - போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர முதலிய வினையெச்சமும், அன்ன, இன்ன என்ற பெயரெச்சமும் உவம உருபுகளாம். இவையும் தனித்து நடத்தல் இல்லை, பெயர் வினைகளை யடுத்தே வரும். ஏ, ஓ, உம், மற்று, கொல் முதலிய சொற்கள் தம் பொருள் உணர்த்துவன. இவையும் தனித்து நடத் தல் இல்லை. ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள - இவைகள் உயிரள பெடையில் இசை கிறைத்தலில் வரும். இவையும் தனித்து நடவா.