பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


மியா, மோ, மதி, யா, கா, அரோ, இருந்து. இட்டு, அன்று-இவைகள் அசைநிலைச் சொற்கள். இவைகளும் தனித்து நடவா. பெயர் வினைகளையே அடுக்கும். சோவென, கோவென, துடுமென - இவைகள் குறிப் பால் பொருள் உணர்த்துவன. இவை யும் தனித்து நடத்தல் இல்லை. பெயர் வினைகளையே யடுத்து வரும். குழையன், அது மற்றம்மா - இவற்றில் பெயரின் பின் ஒன்றும் பலவும் வந்தன. ஓ சாத்தன், இனி மற்ருென்று - இவற்றில் பெய ரின் முன் ஒன்றும் பலவும் வந்தன. உண்ணுய், நடந்தனனே - வினையின் பின் ஒன்றும் பலவும் வந்தன. அம்மா பெரிது, சீ சீ போ - வினையின் முன் ஒன் றும் பலவும் வந்தன. "ஐ முதலிய வேற்றுமை உருபுகளும் அன், ஆன், கிறு, கின்று முதலிய விகுதி, இடைநிலைகளாகிய வினை உருபுகளும், அன், ஆன் முதலிய சாரியை உருபுகளும், போல் முதலிய உ வ ைம உருபுகளும், தத்தமக்குரிய பொருளையுணர்த்தி வருகிற ஏ, ஓ முதலியவையும், வேறு பொருளில்லாமல் செய்யுள் இசை நிறைத்தற்கே வருப வையும், அசையாய் வருதலே பொருளாக நிற்பவையும், குறிப்பில்ை பொருள் உணர்த்தி வருபவையும் ஆகிய இவ்வெட்டு வகையை உடையனவாய், தனித்து நடக்கும் தன்மையில்லாமல், பெயர்ச் சொல்லினிடத்தும், வினைச் சொல்லினிடத்தும், அவற்றின் பின்னே யா யி னு ம். முன்னேயாயினும், ஓர் இடத்தில் ஒன்ருயினும் வந்து ஒன்று பட்டு நடப்பதே இடைச் சொல்லாம்.”