பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


இறுதி மொழியுமாகிய திறந்திடுமின் கதவு எனப் பொருள் நோக்குடையனவாய் அமைந்துள்ளன. இவ் வாறு அமைவதே பூட்டு விற்பொருள் கோள். 'பாவின் முதலிலும் ஈற்றிலும் நிற்கிற சொற்கள் தமக்குள்ளே பொருளை நோக்குதலுடையதே விற் பூட்டுப் பொருள் கோளாம்" குத்திரம்: "எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள் - பொருள் நோக்கு உடையது பூட்டு வில்லாகும்.' 5. தாப்பிசைப் பொருள் கோள் உண்ணுமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணுத்தல் செய்யாது அளறு. இப்பாவில் நடுவில் நின்ற ஊன் என்னுஞ் சொல் :ஊன் உண்ணுமை யென முன்னும், ஊன் உண்ண' எனப் பின்னும் சென்று கூடுகின்றது. இது ஊஞ்சல் கயிறு போல இரு பக்கத்திலும் செல்வதால் இது தாம்பு இசைப் பொருள் கோளாம். "செய்யுளின் நடுவில் நிற்கிற மொழி முதலிலும் இறுதியிலும் சென்று பொருளைக் கூடுவதே தாம்பு இசைப் பொருள் கோளாம்.”