பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


குத்திரம்: - "இடைநிலை மொழியே ஏனை ஈரிடத்தும் கடந்து பொருளை கண்ணுதல் தாப்பிசை.' குறிப்பு: ஊஞ்சற் கயிறுபோல நடுவில் நின்று இரு பக்கத் திலும் செல்லுஞ் சொல் என்பதே தாப்பிசை என் பதன் பொருள். ங் 6. அளைமறி பாப்புப் பொருள் கோள் சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில் சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும் தாழ்ந்ந உணர்வினராய்த் தாளுடைந்து தண் டுன்றித் தளர்வார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதாரே இப் பாவில் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதார், தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டுன்றித் தளர்வார், மூழ்ந்த பிணி நலிய முன் செய்த வினையென்றே முனிவார், சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில் சுழல்வார்” எனத் தலை கீழாய் இடையிலும் முதலிலும் சென்று கூடுகிறது. இவ்வாறு கூடுவதே அளேமறி பாப்புப் பொருள் கோள். "செய்யுளில் ஈற்றில் நின்ற சொல் நடுவிலும் அதன் பின்பு முதலிலும் சென்று இயைவதே அளைமறி பாப்புப் பொருள் கோளாம்.” ஆ