பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


சூத்திரம்: 'செய்யுள் இறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள் கோள் அளை மறி பாப்பே.' குறிப்பு: புற்றிலே தலை வைத்து மடங்கும் பாம்பு போல முன் பின் கை அனுவயிக்கப் படுதலால் இப் பெயர் பெற்றது. பாம்பு புற்றில் தலை வைத்து நுழையும் அளவிலே தலை மேலாம்படி நிலை மாறுதல் இயல்பு. அவ்வாறே செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்துக் கூட் டிப் பொருள் கொள்வது இதன் இலக்கணம். 7. கொண்டு கூட்டுப் பொருள் கோள் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்ருர் வரின். இப்பாவில் வங்கத்துச் சென்ருர் வரின் அஞ்சனத் தன்ன பைங்கூந்தலையுடையாளது மாமேனிமேல் தெங் கங்காய் போலத் திரண்டுருண்ட கோழிவெண் முட்டை உடைத்தன்ன பசலை தணிவாம் எனக் கொண்டு கூட்ட வேண்டும். இவ்வாறு பலவடிகளிலும் கிடக்கின்ற சொற்களை ஏற்ற விடத்தில் எடுத்துக் கூட்டுதலே கொண்டு கூட்டுப் பொருள் கோள். 'பாவின் அடிகள் பலவற்றிலும் கோக்கப்பட்டு கிடக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்ற விடத்தில் எடுத்துக் கூட்டுவது கொண்டு கூட்டுப் பொருள் Gésmr 6mr mruñ.