பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


குத்திரம்: "யாப்பு அடி பலவினும் கோப்பு உடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே." குறிப்பு: மொழி மாற்றுப் பொருள் கோளும், கொண்டு கூட்டுப் பொருள் கோளும் சொற்கள் முன்பின்கை மாற்றப் படுதலால் ஒப்புமையுடையனவாயினும் ஒரடியி லுள்ள சொற்களை முன் பின்னக மாற்றுவதே மொழி மாற்றுப் பொருள் கோளாம். பல அடிகளிலும் வந்த சொற்களை ஏற்றபடி கொண்டு கூட்டுவதே கொண்டு கூட்டுப் பொருள் கோளாம். 8. அடிமறி மாற்றுப் பொருள் கோள் நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் கொடுத்துத் தான்துய்ப்பினு மீண்டுங்கா லீண்டும் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால். இப்பாவில் 'கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங் காலிண்டும் விடுக்கும் வினையுலந்தக்கால் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்-இதை ய றி யா த வ ர் நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந்துடையார்” என அடிகளைப் பொருளுக்கு ஏற்றபடி எடுத்துக் கூட்ட வேண்டும். மரகத மணிப்பணிசெய் மாளிகைகள் ஒருசார் அரிமணி அழுத்தியன ஆலயமது ஒருசார் எரிமனி யழுத்தியன இல்லின்வித மொருசார். இப்பாவில் எந்த அடியை எ ங் ேக கூட்டிலுைம் பொருளும் ஓசையும் வேறுபடா.