பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


"இகர, ஈகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வ ந் த ா ல் அவ்விரண்டுங் கெட ஒர் ஈகாரம் தோன்றும்.” குரு + உதயம் - குருதயம் - இ. தி ல் உகரத்தின் முன் உகரம் வர, அவ்விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது. சிந்து + ஊர்மி - சிந்துார்மி - இதில் உகரத்தின் முன் ஊ க | ர ம் வர, அவ் விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது. சுயம்பூ + உபதேசம் - சுயம்பூபதேசம் - இதில் ஊ காரத்தின் முன் உகரம் வர, அவ்விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது. சுயம்பூ + ஊர்ச்சிதம் # === சுயம்பூர்ச்சிதம் e இ தி ல் ஊகாரத்தின் முன் ஊகாரம் வர அவ்விரண்டுங் கெட ஊகாரம் தோன்றியது. "உகர ஊகாரங்களில் ஒன்றன்முன் அவற்றில் ஒன்று வந்தால் அவ்விரண்டுங் கெட ஓர் ஊகாரம் தோன்றும்.” 'அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் அவற்றில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர் ஆகாரம் தோன்றுதலும், இகர ஈகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர் ஈகாரம் தோன்றுதலும், உகர ஊகாரங்களில் ஒன்றன் முன் அவற்றில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர் ஊகாரம் தோன்றுதலுமே தீர்க்க சந்தியாம்.”