பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


கமலா + உத்சவம் - கமலோத்சவம் - இதில் ஆகா ரத்தின் முன் உகரம் வர, அவ்விரண்டுங் .ெ க ட் டு ஒர் ஒகாரம் தோன்றியது. தயா + ஊர்ச்சிதன் - தயோர்ச்சிதன் - இதில் ஆகாரத்தின் முன் ஊகாரம் fll T அவ்விரண்டுங்கெட்டு ஓர் ஒகாரம் தோன்றியது. "அகர, ஆகாரங்களின் ஒன்றன் முன் இகர, ஈகா ாங்களில் ஒன்று வந்தால், அவ்விரண்டுங் கெட ஓர் ஏகாரந் தோன்றுதலும், அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் உகர, ஊகாரங்களில் ஒன்று வந்தால் அவ்விரண் டுங் கெட ஓர் ஓகாரம் தோன்றுதலும் குன சந்தியாம்.” பரம + ஏகாந்தி - பரமைகாந்தி - இதில் அகரத் தின் முன் ஏகாரம் வர, அவ் விரண்டுங் கெட்டு ஓர் ஐகா ரம் தோன்றியது. சர்வ + ஐசுவரியம் - சர்வைசுவரியம் - இதில் அக ரத்தின் முன் ஐகாரம் வர, அவ்விரண்டுங் .ெ க ட் டு ஓர் ஐகாரம் தோன்றியது. தேவதா + ஏகத்வம் - தேவதைகத்துவம்- இதில் ஆகாரத்தின் முன் ஏகாரம் வர, அவ்விரண்டுங் கெட்டு ஓர் ஐகாரம் தோன்றியது.