பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


முல் அல: காடும் காடு சார்ந்த இடமும் முல்லைத் திணைக்குரிய நிலமாகும். == " . பாலை; சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலைத் திணைக்குரிய நிலமாகும். = மருதம்: வயலும் வயல் சார்ந்த இடமும் மருதத் திணைக்குரிய நிலமாகும். நெய்தல்: கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் திணைக்குரிய நிலமாகும். குறிப்பு: பாலைக்குத் தனிழாக நிலம் இல்லை. குறிஞ்சியிலும் முல்லையிலும் உள்ள சில இடங்கள் வெயிலின் கொடுமையால் தம் இயல்பு திரிந்து மணலாகும். அதையே பாலை என்று வழங்குகின்றன்ர். பொழுது: இது பெரும்பொழுது சிறு பொழுது என இரு வகைப்படும். - பெரும் பொழுது: இது இளவேனில், முது வேனில், கார் காலம், கூதிர் காலம், முன் பனிக் காலம், பின் பனிக்காலம் என ஆறு வகைப்படும். இளவேனில்: சித்திரையும், வைகாசியும் இள வேனிற் காலமாம். முது வேனில்: ஆனியும் ஆடியும் முது வேனிற் காலமாம். கார் காலம்: ஆவணியும், புரட்டாசியும் கார் காலமாம்.