பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


கூதிர்க்காலம்: ஐ ப் ப சி யும், கார்த்திகையும் கூதிர்க்காலமாம். முன் பனிக்காலம்: மார்கழியும், தையும் முன் பனிக் காலமாம். பின் பனிக்காலம்: மாசியும், பங்குனியும் பின் பனிக்காலமாம். -- சிறு பொழுது: இது மாலை, யா ம ம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் அல்லது எற்பாடு என்று ஆறு வகைப்படும். மாலை: இரவின் முதற் பத்து நாழிகை நேரமே மாஆலயாம். (மாலை 6 மணியிலிருந்து 10 மணி முடியவுள்ள நேரம்) s யாமம்: இரவின் இரண்டாம் பத் து நாழிகை நேரமே யாமமாகும். (இரவு 10 மணியிலிருந்து 2 மணி முடியவுள்ள நேரம்). வைகறை: இரவின் மூன்ரும் பத் து நாழிகை நேரமே வைகறையாம். (இரவு 2 மணியிலிருந்து 6 மணி முடியவுள்ள நேரம்) காலை: பகலின் முதற்பத்து நாழிகை நேரமே காலையாம். (பகல் 6 மணியிலிருந்து 10 மணி முடியவுள்ள நேரம்) நண்பகல்: பகலின் இரண்டாம் பத்து நாழிகை நேரமே நண் பகலாம். (பகல் 10 மணியிலிருந்து 2 மணி முடியவுள்ள நேரம்).