பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


பிற்பகல் அல்லது எற்பாடு: பகலின் மூன்ரும் பத்து நாழிகை நேரமே பிற்பகல் அல்லது எற்பாடாம். (பகல் 2 மணியிலிருந்து 6 மணி முடியவுள்ள நேரம்) திணையும் பெரும்பொழுதும் சிறுபொழுதும் மருதத்திற்கும், நெய்தலுக்கும் ஆறு காலங்களும், குறிஞ்சிக்குக் கூதிரும், முன்பனியும், முல்லைக்குக் காரும், பாலைக்கு இருவகை வேனிலும் பின்பனியும் உரிய பெரும் பொழுதாம். ■ மருதத்திற்கு வைகறை காலைகளும், குறிஞ்சிக்கு . யாமமும், முல்லைக்கு மாலையும்; நெய்தற்கு எற்பாடும்; பாலைக்கு நண்பகலும் உரிய சிறு பொழுதாம். கருப்பொருள். - தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை செய்தி, யாழ், பண் முதலியன கருப்பொருளாம். மருதத்திற்குரிய கருப்பொருள் தெய்வம் - இந்திரன் உணவு - நெல் -- விலங்கு - எருமை, நீர் நாய் மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம் பறவை - நாரை, நீர்க்கோழி, தாரா பறை - - - மனமுழா, நெல்லரிகிணை செய்தி - நெல்லரிதல், வைக்கோல் துவைப் - பித்தல், களை பறித்தல் யாழ் - மருத யாழ் பண் - மருதம்