பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O உரிப் பொருள் அந்தந்த நிலத்துக்கு மக்கட்குரியதாகக் கூறும் ஒழுக்கமே உரிப் பொருளாம். மருதத்திற்கு ஊடலும், ஊடல் நிமித்தமும் உரிப் பொருள்களாம். குறிஞ்சிக்குப் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் உரிப் பொருள்களாம். பாலைக்குப் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் உரிப் பொருள்களாம். முல்லைக்கு இருத்தலும், இருத்தற்குரிய நிமித்தமும் உரிப் பொருள்களாம். நெய்தற்கு இரங்கலும், இரங்கற்குரிய நிமித்தமும் உரிப் பொரு ள்களாம். மேற்கூறிய ஐந்திணை. ஒழுக்கம் களவு, கற்பு என இருவகைப்படும. களவு: ஒரு தலைவனும் ஒரு தலைவியும் தனிமையிற் கண்டு அன்புடையவராய்ப் பிறர் அறியாமல் தமக்குள் ஒழுகுகின்ற ஒழுக்கமே களவொழுக்கமாம். கற்பு: களவினல் சிறிது காலம் தொடர்புடைய தலைவனும், தலைவியும் பெற்ருேரும் மற்ருேரும் அறிய மணஞ்செய்து இல்லறம் நடத்துவதே கற்பொழுக்கமாம். 2. புறத்திணை (பன்னிரண்டுங் கூறல்) ஒத்த அன்புடையாராலே யன்றி எல்லாராலும் அனு பவித்து அறியப்பட்டு இது இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்குக் கூறப்படும் பொருளே புறத்திணையாம்.