பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


இது பழந்தமிழரின் போர்முறை, ஈகை, வீரம் முதலிய செயல்களைப் பற்றி விரிவாகக் கூறும். இது வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொது, கைக்கிளை, பெருந்திணை எனப் பன்னிரண்டு வகைப்படும். 1. வெட்சி, வீரர் வெட்சிமாலை யணிந்து பகைவர்க ளுடைய பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்லுதலே வெட்சித் திணையாம். -- 2. கரந்தை வீரர் கரந்தை மாலை யணிந்து பகைவர் கள் கவர்ந்து சென்ற தம் பசுக்கூட்டங்களை மீட்டு வருதலே கரந்தைத் திணையாம். 3. வஞ்சி: வீரர் வஞ்சி மாலை யணிந்து பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்கு எழுவது வஞ்சித் திணையாம். 4. காஞ்சி: வீரர் காஞ்சி மாலை யணிந்து தம் நாட் டிற்கு வந்த பகைவரை எதிர்த்து நிற்றலே காஞ்சித் திணையாம். 5. உழிஞை வீரர் உழிஞை மாலை அணிந்து பகைவ ருடைய மதிலை வளைத்துக் கொள்ளுதலே உழிஞைத் திணையாம். 6. கொச்சி: வீரர் நொச்சி மாலை யணிந்து தம் மதிலைப் பகைவர் வளைத்திருக்கத் தாம் தம் மதிலைக் காத்து நிற்பதே நொச்சித் திணையாம். 7. தும்பை. வீரர் தும்பை மாலையணிந்து பகைவரை வஞ்சியாது நேர் நின்று போர் செய்தல் தும்பைத் திணையாம்.