பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

, 8. வாகை: வெற்றி பெற்ற வீரர் சூடுவது வாகை மாலை. இதுவே வாகைத் திணையாம். - 9. பாடாண்: ஒருவனுடைய வெற்றி, வலிமை, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறுதல் பாடாண் திணையாம். 10. பொது: மேற் கூறிய திணைகளில் கூறப்படா தவையே பொதுவியலாம். மூவரசர்கள் அணிந்த பூக்களையும், அரசியல் திறமையையும், கழல் புனை தலையும் புறங்கொடாத நிலையினையும் மற்றுள்ளவற்றைபும் புகழ் தலே பொதுவியலாம். 11. கைக்கிகள: இது ஒருதலைக் காமம் ஆகும். இது, ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என்று இரு பகுதி களைக் கொண்டதாம். 12. பெருந்திணை: இது எல்லை மீறிய காம வொழுக்க மாகும். பெண்பாற் கூற்று, ஆண்பாற் கூற்று என இது இரு வகைப்படும். ஒத்த அ ன் பி ன் மாறுபட்டன வெல்லாம் இதில் அடங்கும்.