பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

“பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுகளும், ‘ய், ர், ல், வ், ழ், ள்’ என்ற ஆறு இடையெழுத்துக்களுடன் தனித்தனியே சேர இடையின உயிர்மெய் எழுபத்திரண்டாம்.”

பயிற்சி

1உயிர்மெய்யை உயிரை வைத்து எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
2உயிர் மெய்க் குறில் என்றால் என்ன? எத்தனை? எவ்வாறு?
3உயிர்மெய் நெடில் என்றால் என்ன? எத்தனை? எவ்வாறு?
4உயிர் மெய்யை, மெய்யை வைத்து எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
5வல்லின உயிர்மெய் என்றால் என்ன? எத்தனை? எவ்வாறு?
6மெல்லின உயிர்மெய் என்றால் என்ன? எத்தனை? எவ்வாறு?
7இடையின உயிர்மெய் என்றால் என்ன? எத்தனை? எவ்வாறு?
8சுக்கு, திப்பிலி, மிளகு, வண்டு, ஆடு, இலை, உலக்கை, ஈ, ஞமலி, அங்ஙனம், ஊக்கம், எடு, ஏது, தீ, ஓடு, ஒளவை - இவற்றிலுள்ள உயிர்
மெய் எழுத்துக்களைக் கீழ்வரும் கட்டத்தில் அடை.