பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


உயிர்மெய்:

குறில்|நெடில்|வல்லினம்|மெல்லினம்|இடையினம்

9அவன் அங்கு சென்று அவனைக் கண்டான். இருவரும் இன்பமாகக் காலங் கழித்தனர். இறைவனை வணங்கினர் - இவற்றில் வந்த உயிர்மெய்க் குற்றெழுத்துக்களை எடுத்து எழுது.

10செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல். அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான். படித்தோனே பண்புடையான்-இவற்றில் வந்த உயிர்மெய்நெட்டெழுத்துக்களை எடுத்து எழுது.

11துப்பார்க்குத் துப்பாயதும் மழை. கசடறக் கல்வி கற்பாயாக - இவற்றில் வந்த வல்லின உயிர் மெய் எழுத்துக்களை எடுத்து எழுது.

12அந்தணர் என்போர் அறவோர். சங்கொலி காதில் விழுந்தது. அங்ஙனமே சஞ்சலம் தீர்ந்தது - இவற்றில் வந்த மெல்லின உயிர்மெய் எழுத்துக்களை எடுத்து எழுது.

13வானம் வழங்காதெனின் வள்ளல்கள் இல்லை. நன்கலம் நன் மக்கள் பேறு - இவற்றில் வந்த இடையின உயிர் மெய்யெழுத்துக்களை எடுத்து
எழுது.

14சு-கைக்-குடி-த்-ன் நோ-தீர்-து. அற - செய். ச - கு. பஞ் - மஞ் - கு - ல். - யில். - விட்ட எழுத்துக்களைப் பூர்த்தி செய்.