பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


அ, ஆ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ-என்பவைகள் வடிவால் ஒத்து வந்தன. “பிறப்பிடம், தொழில், மாத்திரை, பொருள், உருவம் ஆகியவற்றில் ஒன்றும் பலவும் ஒத்திருப்பது இனவெழுத்தாம்.”

இனவெழுத்துக்கள்-உயிர்

குறில்
நெடில்


உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் ஒன்றுக்கு ஒன்று இனவெழுத்தாகும். அதாவது அகரத்திற்கு ஆகாரமும்; இகரத்திற்கு ஈகாரமும்; உகரத்திற்கு ஊகாரமும்; ஒகரத்திற்கு ஓகாரமும் ஒன்றுக்கொன்று இனமாம்.

ஐ, ஔ என்ற இரு எழுத்துக்களும் கூட்டெழுத்துக்கள். ( ஐ = அ + ய் + இ; ஔ = அ + வ் + உ) ஆகவே ஐகாரம் இகரத்திற்கும், ஒளகாரம் உகரத்திற்கும் இனமாயிற்று.

இனவெழுத்துக்கள்-மெய்

வல்லினம்
மெல்லினம்