பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

3 இனவெழுத்தின் சூத்திரம் யாது?
4 அவன் ஆட்டைக் கண்டான். இவன் ஈயைப் பிடித்தான். உவன் ஊதினான். எவன் அதை உயரே ஏற்றினான்? இவரே ஐயர். இவன் அவனை ஒத்தான். ஓணான் ஓடிற்று. ஒளவை உயிர் காத்தாள். ——— இவற்றில் இருந்து இனவெழுத்துக்கள் பயின்ற சொற்களை நேருக்கு நேர் எழுதிக்காட்டு.
5கங்கணம், சஞ்சலம், பண்டம், தந்தம், பரமன், பன்றி ——— இவற்றிலிருந்து நீ அறிவது யாது?
6 “உரல் ——ஆடைகண்டான் ——— ஞமலி
    அடை ——— ஈதுபட்டம் ——— எங்ஙனம்
    இடை——— ஏடுசங்கு —— பண்டம்
    எடு ———— ஊதுபம்பரம் ——— மரம்
மேற்கூறியவற்றில் இனவெழுத்து வந்த சொற்களை இணை இணையாகச் சேர்.
7மாத்திரை என்றால் என்ன?
8எவ்வெவ்வெழுத்திற்கு எத்தனை எத்தனை மாத்திரை உண்டு?
9அவன் அங்கு சென்றான் - என்ற சொற்றொடருக்கு எத்தனை மாத்திரையுண்டு?
10அ, ஐ, க், ஔ, இ, ஊ, ஒ, ண், ஃ - இவ்வெழுத்துக்களுக்குரிய அளவை தனித்தனியே எழுது.