பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


சுருங்கிய நுசுப்பில் பெருகு வடந்தாங்கி - இதில் முதல் மூன்ருஞ்சீர்களில் மு. ர ண் அமைந்துள்ளது. இது பொழிப்பு முரண். குவிந்து சுணங்கரும்பிய - விரைந்து இதில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் முரண் அமைந் துள்ளது. இது ஒருஉ முரண். சிறிய பெரிய நிகர்மலர் கோதைதன்-இதில் கடைச்சீர் தவிர மற்றையச் சீர்களில் முரண் அமைந் துள்ளது. இது கூழை முரண். வெள் வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்இதில் இரண்டாஞ் சீர் தவிர மற்றையச் சீர்களில் முரண் தொடை அமைந்துள்ளது. இது மேற்கதுவாய் முரண். இருக்கையு கிலேயும் மேந்தெழி லியக்கமும் - இதில் மூன்ருஞ் சீர் தவிர மற்றையச் சீர்களில் முரண் அமைந்துள்ளது. இது கீழ்க்கதுவாய் முரண். துவர்வாய் தீ ஞ் .ெ ச . லு முவந்தெனை முனியா-இதில் நா ன் கு சீர்களிலும் முரண் அமைந்துள்ளது. இது முற்று முரண். ஆகவே 'முரண்தொடை,அடிமுரண்,இணைமுரண், பொழிப்பு முரண், ஒருஉ முரண், கூழை முரண். மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் எனப் பலவகைப்படும்'.