பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


5. ப.:ருெடை வெண்பா வையக மெல்லாங் கழனியா-வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் றேயங்கள்-செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு-வான்கரும்பின் சாறேயந் நாட்டுத் தலையூர்கள்-சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாங்-கட்டியுட் டானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்ருன் கச்சியகம். (வெண்பா மேற்கூறியவாறு, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃருெடை வெண்பா என ஐ வகைப்படும்) ஆசிரியப்பா 1. நேரிசை யாசிரியப்பா நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனெடு நட்பே. 2. இணைக் குறளாசிரியப்பா நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீரும் சார ளுடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே,