பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


செய்யேன் வினைகள் செய்யேன் வினைகள்' என்ற தலைப்பு எதிர் மறை வினையையே குறிக்கும். வினையின் செய்கையை மறுக்கிற வினையே எதிர் மறை வினையாகும். இதைப் பெற்று வரும் வாக்கியமே எதிர்மறை வினை வாக்கியமாம். உ ட ன் பா ட் டு வாக்கியம் போலவே இதுவும் பல வழிகளிலும் வரும். (உ-ம்) அவன் வந்திலன். நான் நடவேன். இறந்த கால, நிகழ்கால உடன்பாட்டு முற்றுக் களில் இடைநிலைக்கும், விகுதிக்கும் ந டு வே இல் என்னும் எதிர்மறை இடைநிலையைச் சேர்த்தால் எதிர் மறை வினைமுற்று வரும். (உ-ம்) அவன் வந்திலன். அவள் வந்திலள். அவர் வந்திலர். அது வந்திலது. அவை வந்திலஇவை இறந்த காலத்தில் வந்த எதிர்மறைவாக்கி யங்கள். மேற் கூறியவாறே நிகழ் காலங் கொள்க. 'செய' என்னும் வாய் பாட்டு எச்சச் சொல்லோடு 'இல்லை’ என்ற சொல்லைச் சேர்த்தால் இறந்த காலங் காட்டும் எதிர் மறை வினையாகும். (உ-ம்) அவன் வரவில்லை, நீ வரவில்லை, நா ன் வரவில்லை. ஆகார இடைநிலை எதிர் ம ைற ைய உணர்த்தும். (உ-ம்) நான் செய்யேன். அது செய்யாது.