பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


இடைப்பிறவைப்புக்குறி ( )- இவ்விரு குறிகளும் இடைப்பிறவைப்புக் குறிகளாம். தொடர்பில்லாத இடைப்பிறவரலாக வரும் தனிச் சொற்ருெடரைப் பிரிக்க இவைகள் இடப் படும். நான் (வயிறு நிரம்ப) உண்டேன். அறத்தை (அழகு) பெறச் செய்தான். தேவர்க்குச்- செல்வம் வேண்டிச்- சிறப்பு எடுத்தான். வந்தான்- அவ்வூருக்குப் போன-சாத்தன் வந்து - சாத்தன் அவ்வூர்க்குப்- போயின்ை. 11. வல்லெழுத்து மிகும் இடங்களும் மிகா இடங்களும் 1. மிகும் இடம் உயிரீற்றுச் சொற் களு க்கு முன் வரும் வல்லெழுத்து மிகும். பலா + காய் = பலாக்காய் வாழை + காய் = வாழைக்காய் வன் தொடர்க் குற்றியலுகரங்கட்கு முன் வரும் வல்லினம் மிகும். பத்து + பாட்டு = பத்துப் பாட்டு கட்டு + சோறு = கட்டுச்சோறு